அருள் மிகு ஸ்ரீ நயினாதீவு நாகபூசனி அம்மன் தேர் திருவிழா!

அருள் மிகு ஸ்ரீ நயினாதீவு நாகபூசனி அம்மன் தேர் திருவிழா! நாகபூசனி அம்மன் தேர் திருவிழா!

இலங்கை, யாழ்ப்பாணம், நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.கடந்த மாதம் 20ஆம் தேதி  காப்புக்கட்டுதலுடன்  ஆரம்பமான நயினை நாகபூசனி அம்மன் ஆலய மகோற்சவத்தில் தொடர்ந்தும், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தது.14ஆம் நாளான நேற்றைய தினம்  காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பத்திற்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு நயினை அம்மன், பிள்ளையார், முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.பின் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் அம்மன் தேரில் ஏற்றப்பட்டு  தேர் திருவிழா நடைபெற்றது..இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்