நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப் கைது
நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப் கைது நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப் கைது
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கார் டிரைவர்கள் ஆறு பேரை கேரள போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையாள நடிகர் திலீப், தூண்டுதலின் பேரில் பாவனாவை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து நடிகர் திலீப் , அவரது மனைவி காவ்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நடிகர் திலீபிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்ற சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.

Comments
Post a Comment