மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி


மத்திய பிரதேச மாநிலம், சேகோர் மாவட்டம், பசந்த்புர் பங்கிரி கிராமத்தை சேர்ந்தவர் சர்தர் கஹ்லா விவசாயி. அவருக்கு ராதிகா(14) மற்றும் குந்தி(11) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். வறுமை காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டில் உள்ளனர். அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் உழு கூட சொந்தமாக மாடுகள் இல்லை . அதை வாடகைக்கு வாங்க கூட பணம் இல்லாத காரணத்தினால் தனது மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுதார். இதனால் சுற்றியுள்ள கிராமப்புற பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உணவு கொடுக்கும் விவசாயிக்கே அன்றாட உன்ன உணவு இல்லாத நிலைமை இங்குதான் நடைபெறுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இதனை பற்றி மாவட்ட பி.ஆர்.ஓ ஆஷிஸ் சர்மா கூறுகையில், இந்த செயல் எல்லாரிடத்திலும் வேதனை அளிக்கிறது. இது தொபர்பாக அரசு ஆய்வு செய்கிறது. விவசாயிக்கு தேவையான அணைத்து உதவியும் செய்யப்படும்.
இது போன்ற பணிக்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் என அவரை அறிவுறுத்தியுள்ளோம். அரசின் திட்டங்களின் கீழ் அவருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அதனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்