தனது மகளையே பாலியல் தொழிலுக்கு விற்ற தந்தை கைது


பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த புத்துராஜ் என்பவர் சலவைத்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.24 மணிநேரமும் போதையில் இருக்கும் இவர், சுதாராணி என்பவருக்கு வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்துள்ளார். இதனால், சுதாராணியிடம் அடிக்கடி பணம் கேட்டுள்ளார், சுதாராணியும் இவர் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். ஒருநாள் புத்துராஜ்ஜிடம் பணம் கேட்டார் சுதாராணி. தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் தனது ஒரே மகளை உன்னிடம் விற்றுவிடுகிறேன் என்று கூறி ரூ.10,000 விலை பேசி சுதாராணியிடம் விற்றுள்ளார். ரூ.3,000 மட்டுமே முன்தொகையாக கொடுத்துவிட்டு சுதாராணி இந்த சிறுமியை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி கொள்ள பணம் கொடுத்ததும் வாங்கிக்கொண்டு தனது வாடிக்கையாளர்களை தேடி விற்பனை செய்ய சென்றுள்ளார்.காரில் வந்த வாடிக்கையாளர்கள், சுதா மற்றும் சிறுமியை காரில் ஏற்றுக்கொண்டு பயணித்துள்ளனர்.இதற்கிடையில் பணம் தொடர்பாக சுதாராணிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தகராறு எற்பட்டுள்ளது, இதில் வாடிக்கையார்கள் இவர்கள் இருவரையும் நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதற்கிடையில் மீதித்தொகையை கேட்டு புத்துராஜ், சுதாராணிக்கு போன் செய்துள்ளார், ஆனால் சுதாராணி இதற்கு செவிசாய்க்கவில்லை. இதனால் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புத்துராஜ்.காவல்துறை அதிகாரி நடத்திய விசாரணையில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு, மேற்கூறிய தகவல்கள் அம்பலமானது. தற்போது சுதாராணி மற்றும் புத்துராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், சிறுமி தொண்டு நிறுவனம் ஒன்றின் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்