பெண்களின் கூந்தல் துண்டிப்பு : மர்மம்
பெண்களின் கூந்தல் துண்டிப்பு : மர்மம்
ஹரியானா மாநிலத்தில் கிராமப்புற பகுதியில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.அப்பகுதியில் வசிக்கும் பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவதால், உள்ளூர் மக்கள், பீதியடைந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில் : தனியாக வீட்டில் இருந்தபோது ஒரு வயதான முதியவர் எங்கள் வீட்டின் அருகில் பார்த்தேன், பார்த்த உடனே அவரை அங்கு இருந்து செல்லுமாறு சொன்னேன் , அங்கிருந்து சென்ற அந்த நபர் சிறிது நேரத்தில் மீண்டும் எங்கள் வீட்டிற்கு அருகில் வந்தார்,அதன் பின், திடீரென சுயநினைவை இழந்தேன். கண்விழித்து பார்த்தபோது, என் கூந்தல் துண்டிக்ககப்பட்டிருந்தது. என கூறினார். இது பேய், பிசாசின் செயலாக இருக்குமோ என்ற அச்சத்தில், உள்ளூர் மக்கள் பயந்து உள்ளனர்.

Comments
Post a Comment