அழகு குறிப்புகள் - டிப்ஸ்!
அழகு குறிப்புகள் - டிப்ஸ்!
நமது அழகை பாதுகாக்க நம் வீட்டில் உள்ள பொருட்களே போதும் இயற்கையான எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டே நாம் அழகினை பாதுகாத்து வரலாம்.நாம் உண்ணும் உணவே மருந்து - மருந்தே உணவு என்று கூறுவதில் தவறு இல்லை நாம் உண்ணும் உணவே இங்கு நமக்கு மருந்தாக பயன்பட போகின்றது.
*வெந்தயம் - குளிர்ச்சியான பொருள் , எளிதில் கிடைக்கக்கூடியவை, உடல் சூடு , வயிற்று வலி ,குடற்புண் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது. இதனை நாம் அரைத்து கொண்டு சூடான நீரில் கலந்து மாவும் போல் வந்த பிறகு அதனுடன் 1/4 கப் தயிர் கலந்து தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊறிய பிறகு அலசலாம். பொடுகு தொல்லை , அரிப்பு , முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு.
*பால் - இது குளிர்ச்சியான பொருள் , பசும் பாலினை 1/2 கப் எடுத்து காய்ச்சிய பிறகு முகம் , உடல் ,கை , கால் என தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும் .இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவடையும் , கருமை நீங்கும்.
*தக்காளி- தக்காளி விழுதினை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவினால் முகம் பளிச்சிடும்.
எந்த ஒரு மேக்கப் செய்தாலும் நமது கண்களையும் சிறிது கவனிக்க வேண்டும். உருளைக்கிழங்கினை வட்டமாக வெட்டி கண்களின் இரண்டு பகுதியிலும் வைத்தால் கண்களின் கருவளையம் மறைந்துவிடும்.

Comments
Post a Comment