இந்தி நடிகர் அக்சய் குமார் பெயரில் போலி இணையதளம்
இந்திய ராணுவ போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக அரசின் உதவியுடன் இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார் நடிகர் அக்சய் குமார். இதன் மூலம் நிதி வசூலித்து, ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனை தவறாக பயன்படுத்தி மோசடி கும்பல் ஒன்று செயல்பட துவங்கியுள்ளது. நடிகர் அக்சய் குமார் பெயரிலே போலியான இணையத்தளம் ஒன்றை உருவாகியுள்ளது. இதனால் நடிகர் அக்சய் குமார் மனம் வருத்தத்தோடு கூறியது .நமது நாட்டிற்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு செய்யும் இத்தொண்டினை தவறாக பயன்படுத்தாதீர்கள்.அதுமட்டும் இல்லாமல் தனது இணையதளம் மூலம் வசூலித்த ரூ.1.09 கோடி நிதியை 11 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்குகடந்த ஏப்ரலில் நன்கொடையாக அளித்துள்ளார். இதற்காக நடந்த விழாவில் அக்சய் குமார், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அந்த தொகையை அளித்தார்.
http://themalar.com/index.php/component/k2/item/481-2017-07-19-16-39-19

Comments
Post a Comment