உலகிலே அதிகமான சம்பளம் வாங்கும் மகாராணி எலிசபெத்
1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி பிரிட்டன் அரியணையில் ஏறியவர் ராணி இரண்டாம் எலிசபெத். இவர் பதவியேற்று இன்றுடன் 64 ஆண்டுகள்ஆகின்றன.பிரிட்டனில் எந்த பகுதிக்கும் எந்நேரத்திலும் பயணிக்கும் உரிமை படைத்தவர் இவர் ஒருவர் தான்.டிரைவிங் லைசென்ஸ் இல்லாலும் கார் ஓட்ட அதிகாரம் படைத்தவர் ராணி ஒருவர் தான். இவர் எந்த நாட்டுக்குச் செல்லவும் பாஸ்போர்ட் தேவையில்லை. உலகிலேயே அதிக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த உலகத் தலைவர் இவர்தான். கடந்த ஆண்டு வரை அரசிக்கு சம்பளமாக 42.8 மில்லியன் பிரிட்டிஷ் அரசு வழங்கியது. தற்போது அவரது சம்பளம் 76.1 மில்லியன் பவுண்ட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்புபடி 1500 கோடி ஆகும்.இந்த வருவாயை வைத்து அவருடைய பயண செலவுகள், பாதுகாப்பு, ஊழியர்கள் மற்றும் அரச அரண்மனையின் பராமரிப்பு ஆகியவற்றிற்காக செலவிட்டார். அந்த தொகையின் ஒரு பகுதி அவருடைய குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது.இந்நிலையில் இந்த ஆண்டு ராணியின் சம்பளம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை ராணி மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment