பாகிஸ்தானிற்கு வெங்கையா எச்சரிக்கை
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெங்கையா நாயுடு கூறியது: காஷ்மீர் முதல் கன்னயாகுமரி வரை அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றனர்.இந்தியா அமைதியை விரும்பும் நாடு.காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரின் ஒரு அடி இடத்தை கூட வேறு யாரையும் எடுத்து செல்ல விட மாட்டோம். பயங்கரவாதத்திற்கு உதவுவது மட்டுமில்லாமல் ஆதரிப்பதும் பெரிய தவறு.கடந்த 1971ல் என்ன நடந்தது என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Comments
Post a Comment