சிறுநீரகத்தை தானமாக கணவருக்கு கொடுக்க முடிவு செய்த மனைவி


அமெரிக்காவின் Knoxville நகரை சேர்ந்தவர் Steve Winfree. இவர் மனைவி Heather. Steveக்கு கடந்த 14 வருடங்களாக சிறுநீரகம் சம்மந்தமான பிரச்சனை இருந்துள்ளது. மேலும், கடந்த நவம்பரிலிருந்து Steve டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இந்நிலையில், Steveவுக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து Steveன் மனைவி Heather தனது சிறுநீரகம் கணவருக்கு பொருந்துமா என மருத்துவ சோதனை செய்ய, சிறுநீரகம் பொருந்துவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் அவரது கணவருக்கு தெரிந்து (Steve Winfree) மகிழ்ச்சியடைந்தார்.மேலும், என் மனைவி எனக்கு சிறுநீரகம் கொடுப்பது என்பது உண்மையில் மகிழ்ச்சியான விஷயம் . என் மரணம் வரை Heather மீதான காதல் தொடரும் எனவும் இதற்கு மேல் அவரை எப்படி காதலிப்பது என தெரியவில்லை எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்