ஷாப்பிங் மால்களில் கணவர்களுக்கு ஓய்வு அறை
ஷாப்பிங் மால்களில் கணவர்களுக்கு ஓய்வு அறை
சீனாவில் உள்ள மால்களில் முதல் முறையாக கணவர்களுக்கான ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. சிறிய வடிவில் இருக்கும் இந்த ஓய்வறைகள் கண்ணாடியால் ஆனவை. இதில் மனைவிமார்கள் ஷாப்பிங் முடித்து வரும் வரை, கணவன்கள் ஓய்வு எடுப்பதற்காக வசதியாக இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் அல்லது டிவி பார்ப்பதற்கான ஸ்க்ரீன்களும் அமைக்கப்பட்டுள்ளது. மனைவியுடன் ஷாப்பிங் செல்ல விரும்பாத கணவர்களுக்காகவே இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த அறைகளை முன்பதிவும் செய்து கொள்ளலாம். தற்போது சில மால்களில் மட்டும் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது

Comments
Post a Comment