உயிரணுக்களை அதிகரிக்கும் முருங்கை பூ


உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவல்லதும், உடலுக்கு பலம் தரக்கூடியதும், கண்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இது ஹார்மோன் சுரப்பியை சமன்படுத்தும் தன்மை உடையது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ஆண் மலட்டு தன்மையை போக்கி உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது.
தேவையான பொருட்கள்:  முருங்கை பூ, நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய், பூண்டு, வெங்காயம், உப்பு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, வரமிளகாய், பூண்டு பற்கள், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர், முருங்கை பூக்களை இதனுடன் சேர்த்து வதக்கி நீர்விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இதை உணவுடன் சாப்பிட்டுவர ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உடலுக்கு பலத்தை தரும் முருங்கை பூவை பயன்படுத்தி ஆண்களுக்கு ஏற்படும் உயிரணு குறைபாடுகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: முருங்கை பூ, பனங்கற்கண்டு, பால்.
செய்முறை:  முருங்கை பூவை நீர்விடாமல் அரைத்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சிறிது நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், சிறிது காய்ச்சிய பால் சேர்க்கவும். உயிரணு குறைபாடு உள்ளவர்கள் இதை எடுத்துவர உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தினமும் ஆண்கள் உணவில் முருங்கை கீரை ,முருங்கை காய், பூ ,எடுத்துக்கொண்டால் அவர்களது உயிரணுக்களை அதிகரிக்கும் .உடல் சீராகும் , வலுப்பெறும்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்