வட கொரியாவிற்கு எதிராக போர் : அமெரிக்கா-தென் கொரியா


கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.,வின் எதிர்ப்பை மீறி, பலமுறை அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. வட கொரியா மீது, ஐ.நா., பொருளாதார தடை விதித்துள்ள போதிலும், அதனை பொருட்படுத்தவில்லை.சமீபத்தில், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது இது அமெரிக்காவின் ஒரு நகரத்தை அழிக்கவல்லது.இதனால், கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தென் கொரிய கடல் பகுதியில் அமெரிக்க படைகளும், தென் கொரிய ராணுவ படைகளும் இணைந்து போருக்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.இரு நாடுகளையும் சேர்ந்த விமானங்கள், நேற்று வானில் பறந்து, குண்டு மழை பொழிந்தன: இதில், 907 கிலோ எடை உடைய, அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை, நடுக்கடலில் வீசி சோதனை செய்தன; இந்த குண்டுகள், பதுங்கு குழிகளையும் தகர்க்க கூடியவை. கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றன.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்