திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை : சக்திகாந்த தாஸ்

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. பற்றி முன்னாள் மத்திய பொருளாதார விவகார துறை செயலாளர் கூறியதாவது :

2017 ஆம் ஆண்டு  நடந்த  ரூபாய்  நோட்டு வாபஸ் நடவடிக்கை என்பது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல.2016ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கலின் போதே அது குறித்து ஆலோசித்தோம். ஆனால் அதற்கான வாய்ப்பு அப்போது அமையவில்லை.இந்த நடவடிக்கையை அமல்படுத்தும் முன், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிறிது காலத்திற்கு பாதிப்பு வரும் என்பது எங்களுக்கு தெரியும். ஆகையால் முன்னெச்செரிக்கையுடன் ஏற்பாடுகள் செய்து விட்டு செயல்பட்டோம்.இந்த நடவடிக்கையால் இந்தியாவில் அதிகமாக இருந்த கருப்பு பணம் செல்லாமல் போனது,  கள்ள நோட்டு புழக்கம் தடுப்பு, பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி உதவி தடுப்பு போன்ற செயல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைத்தது. இதனால் அரசுக்கு ஒரு முன்னேற்றம் கண்டுள்ளது.தற்போது அதிகமானோர் வரி செலுத்த ஆரம்பித்துள்ளனர்.  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.,அமலுக்கு பிறகு கறுப்பு பணம் புழக்கம் குறைந்து விடும். வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொது கட்டுமானம் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கும். இவ்வாறு முன்னாள் மத்திய பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் கூறினார்.

http://themalar.com/ 

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்