கம்ப்யூட்டர் ஜாப் - அப்ப உங்களுக்கு தான் இந்த டிப்ஸ் !



பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என பல நோய்கள் நம்மை சூழ தொடங்குகிறது. இவற்றைச் எவ்வாறு சரிசெய்வது? இதற்காக சில அருமையான டிப்ஸ்
*காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் (தியானம் ) செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் மனம் புத்துணர்ச்சி அடைந்ததை உணர்வதுடன், உங்களுடைய அன்றைய வேலை சிறப்பாக அமையும்
*நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு துண்டினை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.
*முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள்.
*பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை நாலாபுறங்களிலும் திருப்பி கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள்.
*அதிகமான தண்ணீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கம்ப்யூட்டரை அதிகமாக உபயோகிப்பவராக இருந்தால் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகத்தினை கழுவுவது நல்லது.
இறுதியாக பழங்கள் ,காய்கறிகள் சாப்பிடுவது அஜீரணக்கோளாறு வருவதை தவிர்க்கிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்