குறைந்த விலையில் சத்தான உணவு
சத்தான உணவு சத்தான உணவு
காலையில் எழுந்தவுடன் டீ,வடை சாப்பிடாவிட்டால் சிலபேருக்கு வேளையே நடக்காது. அதுமட்டுமில்லாமல் மாலை நேரங்களில் சூடான வடை பலகாரங்கள் சாப்பிடாமலும் சிலரால் இருக்க முடியாது? அப்படி நாம் உண்ணும் உணவு நம் உடல் நலத்திற்கு ஏற்றது தானா ? தற்போது இருக்கும் பொருளாதாரத்தில் குறைந்த விலையில் உடலுக்கு ஏற்ற இயற்கையான உணவு பலகாரங்கள் குறைந்த விலையில் வாங்கிவிட முடியுமா? இங்கு முடியும் .............. இங்குள்ள ஒரு கடையில் 1ரூபாய்க்கு பலகாரங்கள் விற்பணை செய்யப்படுகிறது.
கீழக்கரை பஜாரில் வசிக்கும் பொன்னுத்தாயி, மாணிக்கம் பிள்ளை என்பவர்கள் மிகுந்த காலமாக பலகாரம் விற்கும் தொழிலை செய்து வருகின்றனர். இது பற்றி பொன்னுத்தாயி கூறும் போது .... நானும் என் கன்மவரும் மிகுந்த நாட்களாக இத்தொழிலை செய்து வருகிறோம். காலை நேர பகுதில் உடலுக்கு வலுவூட்ட கூடிய பெயர் வகைகள் மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட பயர் போண்டா விற்கிறோம். இதனை லாப நோக்கத்துடன் செய்ய வில்லை. மனதிற்கு பிடித்ததால் செய்து வருகிறோம். இதனால் மக்களிடம் நற்பெயரை பெற்று வருகிறோம் அதுவே எங்களுக்கு போதுமானது.என்று புன்னகையுடன் கூறினார்.

Comments
Post a Comment