சாலையில் குழந்தை பெற்றெடுத்த பெண்
சாலையில் குழந்தை பெற்றெடுத்த பெண்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்புரியா மருத்துவமனைக்கு நேற்று பிரசவ வலி காரணமாக கர்ப்பிணி பெண் உறவினர்களோடு வந்தார். ஆனால் பணியில் இருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதோடு வலுக்கட்டாயமாக அந்த கர்ப்பிணி பெண்ணை வெளியேற்றினர். யாரும் உதவி செய்ய முன்வராததால் வெளியேற்றப்பட்ட பெண் சாலையோர பகுதியிலே வலி தாங்க முடியாமல் குழந்தையை பெற்று எடுத்தார். இந்த சம்பவம் ஜெய்ப்பூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த பலரும் வேதனையோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்தனர்.சாலையில் கர்ப்பிணி குழந்தை பெற்றெடுத்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என ராஜஸ்தான் மாநில பெண்கள் கமிஷன் அறிவித்துள்ளது.
மருத்துவமனை நிர்வாக அதிகாரி கூறுகையில்: எங்களுடைய மருத்துவமனையில் பிரசவ அறையில் பலருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் சிறிது நேரம் தாமதம் ஆகும் என்று கூறியுள்ளார்கள் , அதற்கு அந்த கர்ப்பிணி பெண் ணுடன் வந்த உறவினர் அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு சென்று விட்டார். இதற்கும் எங்களது மருத்துவ மனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment