பழைய நகை க்கு ஜி.எஸ்.டி., இல்லை
பழைய நகை க்கு ஜி.எஸ்.டி., இல்லை
இரண்டு தினங்களுக்கு முன்பு பழைய நகைகளை விற்கும்போது 3 சதவிகித ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும் என்று மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா அறிவிப்பு வெளியிட்டார் . இதை தொடர்ந்து மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் நேற்றைய தினம் மக்களுக்கு புரியும் வகையில் தெரிவிக்க வருவாய் துறை, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தனிநபர், பழைய நகைகளை கடைகளில் விற்கும் போது, ஜி.எஸ்.டி., செலுத்த தேவையில்லை. அதே சமயம், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யாத வியாபாரிகளிடம் இருந்து அதிக அளவில் பழைய நகைகளை கொள்முதல் செய்யும் போது ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த கடைக்காரர்கள் வாங்கும் போது, 3 சதவீத வரி வசூலிக்க வேண்டும். தனிநபர் விற்பனைக்கு, ஜி.எஸ்.டி., வசூலிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment