தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் ‘வைஃபை ஹாட் ஸ்பாட்’ சேவை
பிஎஸ்என்எல் ‘வைஃபை ஹாட் ஸ்பாட்’ சேவை பிஎஸ்என்எல் ‘வைஃபை ஹாட் ஸ்பாட்’ சேவை
தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தற்போது இணையதள பயன்பாட்டுக்கு தமிழகம் முழுவதும் 750 இடங்களில் ‘வைஃபை ஹாட் ஸ்பாட்’ அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக பொது இடங்களில் ‘வைஃபை ஹாட் ஸ்பாட்’ சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்கா, மருத்துவமனை, பேருந்து, ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங் களில் ‘வைஃபை ஹாட் ஸ்பாட்’ அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.22 கோடியில் தமிழகம் முழுவதும் 750 இடங்களில் இந்த ‘வைஃபை ஹாட் ஸ்பாட்’கள் அமைக்கப்பட உள்ளன. இதுவரை 203 ‘ வைஃபை ஹாட் ஸ்பாட்’கள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்பட்டு விடும்.
பொதுமக்கள் எந்த தொலைபேசி சேவையை பயன்படுத்தினாலும் மேற்கண்ட இடங்களுக்குச் சென்று 15 நிமிடம் வரை இணையதள வசதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கொண்டு பயன்படுத்த ‘இ-கூப்பன்’ மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் இணைய தள சேவையைப் பெற முடியும். என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.

Comments
Post a Comment