சிறுமி கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பு : சுப்ரீம் கோர்ட்
புதுடெல்லி சண்டிகரை சேர்ந்த 10 வயது சிறுமி சில நாட்களாக தொடர்ந்து வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூற , பின் மருத்துவ பரிசோதனையில் 10 வயது கொண்ட சிறுமி கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இது பெற்றோர் மற்றும் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த சிறுமியிடம் கேட்டபோதுதான் தெரிந்தது , அவரது நெருங்கிய உறவினரே தொடர்ச்சியாக சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிறுமியின் கருவை அழிக்க சண்டிகர் மாவட்ட கோர்ட்டில் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கக்கோரி மனு தாக்கல் செய்தனர் 26 வார கருவாக உள்ளதால் அனுமதி வழங்கவில்லை, இதனை அடுத்து அந்த பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர் ஆனால் அங்கு விசாரித்த நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Comments
Post a Comment