பிரணாப்பின் வழிகாட்டுதல் ஒரு தந்தையின் வழிகாட்டுதல் போல்
டில்லி ராஷ்டபதி பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் : ‛‛ ஜனாதிபதி பிரணாப் உடன் சேர்ந்து பணியாற்றியதை எனது பாக்கியமாக கருதுகிறேன். அவரது வழிகாட்டுதல் ஒரு தந்தையின் வழிகாட்டுதல் போல் அமைந்தது. அவருடன் சேர்ந்து பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். '' என கூறினார். நானும் பிரதமர் மோடியும் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வந்திருக்கிறோம். இந்த தருணத்தை பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் தருணமாக பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் புன்னகையுடன் கூறினார்.

Comments
Post a Comment