அமலாக்கத் துறை அதிகாரிகள் லண்டனுக்கு சென்றுள்ளனர்: மல்லையா
9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துவிட்டு பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்றார். பல மாதங்கள் ஆகியும் இன்றளவும் நாடு திரும்பாத மல்லையாவை நாடு கடத்தி, ஒப்படைக்கும்படி, மத்திய அரசு கொடுத்த மனுவின் அடிப்படையில் லண்டனில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கு தேவையான கூடுதல் ஆதாரங்களை அளிப்பதற்காக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், லண்டனுக்குவிரைந்துள்ளனர்.மல்லையாவை, விரைந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் நம் அதிகாரிகள் ஈடுபடுவர் என, அமலாக்கத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment