நினைவலைகளும் உரத்த சிந்தனையும் !

Memories and loud thinking!

அப்பா ! காலம் எவ்வளவு விரைவாக ஓடுகிறது
நான் குழந்தை பருவத்தில் ஆடிய விளையாட்டுகள் 
பார்த்த விவசாய முறைகள் , பல்வேறு கிராமியத் 
தொழில்கள் எப்படியெல்லாமோ மாறிவிட்டன 
சில காணாமலே போய்விட்டன
நாகரிகம் வளர்ந்தது , நல்லது தான் 
அறிவியல் வளர்ந்தது நல்லது தான் 
ஊர்கள் உருவம் பெருக்கப்பெற்று நகர்புறமாகின , நல்லது தான் 
மாற்றம் தேவைதான்; ஆனால் எவ்வளவுக்கு ?
அழிந்து வரும் கிராமியத் தொழில்களின் மத்தியில் 
நம்பிக்கைத் தளிர்களாக இருப்பது 
படிக்கும் மாணவ சமுதாயம் மட்டும் தான் !
மகிழ்ச்சி ; மட்டற்ற மகிழ்ச்சி தான் !
அவர்கள் வருங்காலம் வசந்த காலமாக ,
தொழிற்களமாக மாற்ற நாம் என்ன செய்துள்ளோம் ?
உலகத்தை உள்ளங்கையில் கொண்டு வந்து விட்டோம் 
என்ற மகிழ்ச்சியில் இருக்கும் விஞ்ஞானிகளும்,
காதோடு ஒட்டிய அலைபேசியுடன் அலையும் யுவன் , யுவதிகளும் 
தொலைக்காட்சின் முன்னே காலத்தைக் கரைத்துக் 
கொண்டிருக்கின்ற பெற்றோர்களும் 
இலவசங்களால் ஏமாற்றப்படும் ஏழை மக்களும் போதுமா ?
நம் இளைய சமுதாயத்திற்காக உரக்க சிந்திப்போம் !
உறுதியாய் முடிவெடுப்போம் !

அன்புடன் 
Dr.N.தம்பி அருள்.,M.B.B.S.,M.S.,DLO.,Ph.D., 

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்