ஜூலை 27ல் கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழா
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நினைவிடம் 2.4 ஏக்கரில் ரூபாய் 15 கோடியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி, மற்றும் மேம்பாடு அமைப்பு நினைவு மண்டபம் கட்டுமான பணியை கடந்த அக்.,15ல் துவக்கியது.அப்துல்கலாம் 2ம் ஆண்டு நினைவு தினமான ஜூலை 27 அன்று மண்டபத்தை திறப்பதற்கு ஜூலை 7 க்குள் கட்டுமான பணி முடிக்க ராணுவ அதிகாரிகள் 'இலக்கு' நிர்ணயித்து கடந்த 8 மாதமாக இரவு பகலாக பணி நடந்து, முடிவுறும் தருவாயில் உள்ளது. கலாமின் 'பசுமை கனவு' நனவாக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு விதமான மரங்கள், செடிகள் கொண்டு வரப்பட்டு மண்டபத்தை சுற்றி நடவு செய்துஉள்ளனர்.மண்டபத்தில் மின் அலங்கார விளக்குகள் பொருத்தும் பணி நடக்க உள்ளது. இந்த நினைவு மண்டபத்தை ஜூலை 27 ல் பிரதமர் மோடிதிறந்து வைக்கவுள்ளார்.

Comments
Post a Comment