பெண்களின் மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுமுறை அளித்த நிறுவனம்
பெண்களின் மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுமுறை அளித்த நிறுவனம்
மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கும் புதிய கொள்கையை மும்பையை சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள கல்சர் மெஷின் என்ற டிஜிட்டல் மீடியா நிறுவனம் தான் இவ்வாறு செய்துள்ளது. இதை வரவேற்றுஅந்த நிறுவன பெண் ஊழியர்கள் பதிவு செய்த கருத்துக்களின் வீடியோ பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் வைரலாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரும் புதிய விடுப்பு கொள்கை குறித்து அறிவிக்கும் கருத்துகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளதாவது, பெண்களின் வலியை நாம் உணர்ந்து கொள்வதில்லை. மாதவிடாய் காலங்களில் பெண்கள் பணிக்கு வந்தாலும் அவர்களால் வேலை செய்ய முடியவில்லை. இதனால், அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து விடுமுறை அளிக்கிறோம் என கூறியுள்ளார். இதுபோன்ற புதிய விடுப்பு வழங்க முன் வந்துள்ள இந்த நிறுவனம், நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தின் முதல் நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்துள்ளது.

Comments
Post a Comment