இந்தியாவிற்கு மிக் - 35 ரக போர் விமானம் : ரஷ்யா


இந்தியா கடந்த 50 ஆண்டுகளாக ரஷ்யாவை சேர்ந்த மிக் ரக போர்விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. தற்போது அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிக் - 35 ரக விமானங்களை உற்பத்தி செய்த இந்நிறுவனம் இந்தியாவுக்கு விற்க தயாராக உள்ளதாக கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் இல்யா டரசென்கோ கூறுகையில் : உலக நாடுகளில் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஒரே போர் விமானம் இதுதான். இந்தியாவிற்கு விற்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான டெண்டரை பெற இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இந்த விமானங்களை பெற இந்தியாவும் ஆர்வமாக உள்ளது.
#Themalar
#E-magazine
#Tamil News

www.themalar.com

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்