பெண்ணின் முதுகுப்பகுதி பெரிதாக இருந்ததால் சந்தேகம் : கைது

பெண்ணின் முதுகுப்பகுதி பெரிதாக இருந்ததால் சந்தேகம் : கைது

சீனாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவரின் முதுகுப்பகுதி மற்றும் மார்பு பகுதி அளவுக்கு அதிகமாக பெரிதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். சோதனையின் போது குறித்த பெண் தனது மார்பு மற்றும் முதுகுப்பகுதியில் 102 ஐபோன்கள் மற்றும் 15 கைக்கடிகாரம், டேப் கொண்டு உடலுடன் சேர்த்து ஒட்டப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்னை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதுசெய்யப்பட்ட பெண் பணத்திற்காக பொருட்களை கடத்தி செல்பவர் என்றும், அவருக்கு மேல் ஒரு நபர் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்