பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் : 'துாய்மை இந்தியா

துாய்மை இந்தியா' துாய்மை இந்தியா'

மும்பையில், மெட்ரோ ரயில் நிலையங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும், 'கிரஷர்' என்னும் மறுசுழற்சி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மும்பையில், அதிக அளவில் பயணியர் வந்து செல்லும், மெட்ரோ ரயில் நிலையங்களில் கிரஷர் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணியர், தங்களிடம் உள்ள, பயன்படுத்தப்பட்ட, பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த இயந்திரத்தில் போட அறிவுறுத்தப்ட்டுள்ளனர்.அங்கங்கே விளம்பர பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களை இயந்திரத்துக்குள் போட்டதும், ஒரு ரசீது கிடைக்கும். இந்த ரசீதை கொண்டு ரயில் நிலையத்திற்குள் பொருட்கள் வாங்கும்போது தள்ளுபடி பெறலாம்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்