வயிற்று வலிக்கு மருந்தாகும் கறிவேப்பிலை
வயிற்று வலிக்கு மருந்தாகும் கறிவேப்பிலை வயிற்று வலிக்கு மருந்தாகும் கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் அமினோ அமிலங்கள், போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கறிவேப்பிலையை அரைத்துகறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி, அதை 1 டம்ளர் மோருடன் கலந்து, ஒரு நாளைக்கு 2 முறைகள் என தினமும் அருந்தி வந்தால் உடலுக்கு நல்லது. உடல் சூடு தணிவதுடன் வயிற்றில் உள்ள நோய்த்தொற்றுகளும் போய்விடும். ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து அதில் 35-40 கறிவேப்பிலை இலைகளை சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்து வடிகட்டி, அதனுடன்எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. எனவே இது இளநரை, முடி உதிர்வு மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தினமும் பலமுறைகள் பருகி வரலாம்.

Comments
Post a Comment